அண்ணா பல்கலை போட்டிகள் செயின்ட் ஜோசப் அணி சாம்பியன்
சென்னை :அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள், பல்வேறு மண்டலங் களாக பிரிக்கப்பட்டு, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், மூன்றாம் மண்டலத்திற்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் மாநிலம் முழுதும் நடந்தன. இதில், செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் கல்லுாரி அணி, தடகளம், பூப்பந்தாட்டம், கூடைப்பந்து, வாலிபால் ஆகிய போட்டிகளில் இருபாலரிலும் முதலிடங்களை வென்றன. சதுரங்கப் போட்டியில் பெண்கள் பிரிவில் முதலிடமும், ஆண்கள் பிரிவில் இரண்டாமிடத்தையும் வென்றன. ஆண்களுக்கான பேட்மின்டன், கபடி, ஹாக்கி, கால்பந்து, ஹேண்ட்பால், டென்னிஸ் ஆகிய போட்டிகளில் முதலிடங்களை கைப்பற்றின. இதன் அடிப்படையில், மூன்றாம் மண்டலத்தில், அதிக புள்ளிகள் பெற்ற, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி அணி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பை வென்றது.