பா.ஜ., நிர்வாகி மிண்ட் ரமேஷ் மீது மேலும் ஒரு வழக்கு
மாதவரம் சென்னை முகப்பேரை சேர்ந்தவர் மிண்ட் ரமேஷ், 51; பா.ஜ., நெசவாளர் பிரிவு மாநில நிர்வாகி உள்ளார்.புழலை அடுத்த புத்தகரத்தை சேர்ந்த வேணு என்பவருக்கு சொந்தமான இடத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து விற்ற வழக்கில், புழல் போலீசார் அவரை கைது செய்து, கடலுார் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், அம்பத்துார் கள்ளிகுப்பத்தை சேர்ந்த விஜயகுமார், 70 என்பவர், தனக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, அதை அபகரிக்கும் வகையில் தொல்லை கொடுப்பதாக, அம்பத்துார் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார்.மேலும், திருப்பதி செல்ல மாதவரம் பேருந்து நிலையத்திற்கு மனைவியுடன் வந்த தன்னை, மிண்ட் ரமேஷ் கூட்டாளிகள் கத்தியை காட்டி மிரட்டி, போலீசில் அளித்துள்ள புகாரை திரும்ப பெறாவிட்டால், கொலை செய்து விடுவோம் என மிரட்டினர் எனவும், போலீசில் விஜயகுமார் புகார் அளித்தார்.இதுகுறித்து, மாதவரம் போலீசார், மிண்ட் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது, மேலும் ஒரு வழக்கு பதிந்துள்ளனர்.***