உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெத் ஆம்பெட்டமைன் விற்பனை மேலும் ஒருவருக்கு காப்பு

மெத் ஆம்பெட்டமைன் விற்பனை மேலும் ஒருவருக்கு காப்பு

வளசரவாக்கம், சென்னை வளசரவாக்கத்தில், மெத் ஆம்பெட்டமைன் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.வளசரவாக்கம் மாநகராட்சி அலுவலகம் அருகே, மெத் ஆம்பெட்டமைன் வைத்திருந்த அய்யப்பன்தாங்கலை சேர்ந்த சுபாஷ், 29, வளசரவாக்கம் ஆழ்வார்திருநகரை சேர்ந்த கார்த்திகேயன், 27, மற்றும் வளசரவாக்கம் ஆற்காடு சாலையை சேர்ந்த அரவிந்த், 30, ஆகிய மூவரை, கடந்த 23ம் தேதி கைது செய்தனர்.இவர்களுடன் தொடர்புடைய வளசரவாக்கம் ஆற்காடு சாலையை சேர்ந்த விக்னேஷ், 29, என்பவரை, மறுநாள் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 9 கிராம் மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.தொடர் விசாரணையில், இவ்வழக்கில் தொடர்புடைய சென்னை சேலைவாயல் முருகப்பா தெருவை சேர்ந்த ஜஸ்வீர், 34, என்பவரை, நேற்று கைது செய்தனர்.அவரிடம் இருந்து, 5 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 4 போதை மாத்திரைகள், 20 கிராம் கஞ்சா, 2 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ