அ.தி.மு.க.,வில் மீண்டும் ஆண்டனிராஜ் ஐக்கியம்
சென்னை: அ.ம.மு.க., இளைஞர் பாசறையின் மாநில இணைச் செயலர் ஆண்டனி ராஜ், மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்தார். தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஆண்டனி ராஜ், அ.தி.மு.க., நிர்வாகியாக இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஏற்பட்ட பிளவின்போது, அ.ம.மு.க.,வில் இணைந்தார். அங்கு அவருக்கு இளைஞர் பாசறையின் மாநில இணைச் செயலர் பதவி வழங்கப்பட்டது. தற்போது, அ.ம.மு.க.,விலிருந்து விலகிய ஆண்டனி ராஜ், பொதுச் செயலர் பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து, பழனிசாமி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடனிருந்தார். அ.ம.மு.க.,விலிருந்து விலகி, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த ஆண்டனிராஜ். உடன், முன்னாள் அமைச்சர் வேலுமணி. இடம்: அ.தி.மு.க., தலைமையகம், ராயப்பேட்டை.