உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பராமரிப்பாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

பராமரிப்பாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை:அரசு அங்கீகரிக்கப்பட்ட பராமரிப்பாளர் பயிற்சியை, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள 'வித்யாசாகர்' எனும் தொண்டு நிறுவனம் வழங்குகிறது.நுாறு சதவீதம் வேலை வாய்ப்புள்ள இந்த பயிற்சியை பெற, மாற்றுத்திறனாளிகளுடன் வேலை செய்ய விருப்பமுடையோர் விண்ணப்பிக்கலாம்.குறைந்தபட்சம் 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பயிற்சியின்போது மாதம் 2,000 ரூபாய் ஊக்கத்தொகையும், 1,000 ரூபாய் போக்குவரத்து செலவும் வழங்கப்படும்.மூன்று மாத பயிற்சி காலம் முடிந்த பின், 12,000 முதல் 20,000 ரூபாய் வரை மாத வருமானம் பெற வாய்ப்புள்ளது. பயிற்சி வரும் 19ம் தேதி துவங்க உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 94442 11954 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை