மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
04-Sep-2025
சென்னை :சென்னை மாநகர போலீசில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து கொண்டே, டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்று, டி.எஸ்.பி., ஆக தேர்வான ராமலிங்கத்தை, கமிஷனர் அருண் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார். சென்னை மாநகர போலீசில், காவல் கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ராமலிங்கம். கடந்த, 2011ம் ஆண்டில் சீருடை பணியாளர் தேர்வு வாரிய தேர்வில் வெற்றி பெற்று, எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தார். நாகப்பட்டினம், அம்பத்துார், மத்திய குற்றப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் ஆகிய இடங்களில் பணிபுரிந்து உள்ளார். இந்த ஆண்டு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார். இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து கொண்டே, அதிகாரிகள் ஒப்புதல் பெற்று கடந்தாண்டு, டி.என்.பி.எஸ்.சி., எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் பங்கேற்றார். தேர்வில், டி.எஸ்.பி.,யாக வெற்றி பெற்று, பணி நியமன ஆணை பெற்றுள்ளார். இவரின் விடா முயற்சிக்காக, ராமலிங்கத்தை தன் அலுவலகத்திற்கு அழைத்து, கமிஷனர் அருண் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.
04-Sep-2025