உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தெரு நாய்களா... வெறி நாய்களா? பீதியில் நெற்குன்றம் மக்கள்

தெரு நாய்களா... வெறி நாய்களா? பீதியில் நெற்குன்றம் மக்கள்

நெற்குன்றம்: நெற்குன்றத்தில், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கும் தெருநாய் களால், பகுதிமக்கள் பீதியடைந்துள்ளனர். நெற்குன்றம் என்.டி.படேல் இரண்டாவது தெருவில், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளை தெரு நாய்கள் துரத்தி கடிப்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வளசரவாக்கம் மண்டலம், 148வது வார்டு நெற்குன்றம் என்.டி.படேல் 2வது சாலையில் சுற்றித்திரியும் தெரு நாய்கள், அவ்வழியே செல்வோரை துரத்தி துரத்தி கடிக்கிறது. கடம்பாடியம்மன் நகர் அய்யப்பா தெருவில், கடந்த மாதம் 25ம் தேதி, இரு பள்ளி மாணவர்கள் உட்பட நான்கு பேரை, ஒரு தெருநாய் கடித்து காயப்படுத்தியது. அதேபோல, ஜெயராம் நகர் 2வது தெருவைச் சேர்ந்த பிரபு - மீனா தம்பதியின் 3 வயது மகனின் பிறப்புறுப்பை, கடந்த 10ம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடியபோது, தெரு நாய் கடித்தது. இதுபோல் அடிக்கடி நடக்கும் நாய்க்கடி சம்பவத்தால், சமீபமாக நாய்களுக்கு வெறிபிடித்துள்ளது என பீதியடைந்துள்ள பகுதி மக்கள், மாநகராட்சியிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ