பணம் பறிக்க முயற்சி வாராகி மீண்டும் கைது
சென்னை, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி முன்னாள் டீன் தேரணி ராஜனை மிரட்டிய வழக்கில், 'யு டியூப்பர்' வாராகி மீண்டும் கைது செய்யப்பட்டார். சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் வாராகி என்ற கிருஷ்ணகுமார், 51; யு டியூப்பர். இவர், செங்கல்பட்டு மாவட்டத்தில், 1.08 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்ழ வக்கில், காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவ கல்லுாரி முன்னாள் டீன் தேரணி ராஜனிடம், 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய வழக்கில், கீழ்ப்பாக்கம் போலீசார், வராகியை கைது செய்தனர். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட அவர், செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். *