உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையில் அட்டகாசம் போதை நபர் கைது

சாலையில் அட்டகாசம் போதை நபர் கைது

ராயப்பேட்டை, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, சாலையில் அட்டகாசம் செய்த போதை நபரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில், நேற்று முன்தினம் இரவு, பொதுமக்களுக்கு இடையூறாக, போதை நபர் ஒருவர் சாலையில் அட்டகாசம் செய்துள்ளார். அப்போது, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர், அவரை நையப்புடைத்து சாலையோரம் விட்டனர்.அங்கிருந்தோர் அந்த போதை நபரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.மருத்துவமனைக்குச் சென்று, அண்ணா சாலை போலீசார் விசாரித்ததில், அவர் விழுப்புரத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 27, என்பது தெரிந்தது. விசாரிக்க சென்ற போலீஸ்காரர் கண்ணன் என்பவரையும் அவர் ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து, ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்