உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏரிகள் நிரம்பாததால் வெள்ள பாதிப்பு குறைவு

ஏரிகள் நிரம்பாததால் வெள்ள பாதிப்பு குறைவு

சென்னை : குன்றத்துார் ஒன்றியத்தில் வரதராஜபுரம், திருமுடிவாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், அய்யப்பன்தாங்கல், பரணிபுத்துார், கொல்லச்சேரி, மலையம்பாக்கம் உள்ளிட்ட 12 ஊராட்சிகளில், ஆண்டுதோறும் வெள்ள பாதிப்பு ஏற்படும்.மணிமங்கலம் ஏரி, சோமங்கலம் ஏரி, ஒரத்துார் நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரிகள் நிரம்பி வழிந்தால் மட்டுமே, புறநகர் பகுதிகளான வரதராஜபுரத்தில் அதிகளவில் வெள்ள பாதிப்பு ஏற்படும். ஏரிகள் முழு கொள்ளளவை எட்டாததால், நேற்று மாலை 3:00 மணி நிலவரப்படி வரதராஜபுரம் உள்ளிட்ட புறநகர் பகுதியில் வெள்ள பாதிப்பு இல்லை. தாழ்வான சில இடங்களில் மட்டும் மழைநீர் தேங்கி காணப்பட்டது.பல்லாவரம், கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம், மேடவாக்கம் பகுதி ஏரிகளில், உபரிநீர் வெளியேறும் போக்கு கால்வாய்கள் சமீபத்தில் துார்வாரப்பட்டது. தவிர, இந்த ஏரிகள் அனைத்திலும் 60 சதவீத நீர் மட்டுமே தேங்கியிருந்தது. இதனால், சுற்றுப்புற பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

PR Makudeswaran
அக் 16, 2024 10:18

சும்மா உட்கார்ந்து kondu கிறுக்குகிறோம். சரி. 67 க்கு பின் எந்த கழக அரசு பாராட்டும் படி ஊழல் இல்லாமல் உருப்படியாக இருந்தது என்று சொல்ல முடியுமா


kantharvan
அக் 19, 2024 07:02

அதை மக்கள் அன்றி நீங்கள் எப்படி சொல்ல முடியும் ? அதுதான் மக்கள் அன்றே தீர்ப்பு கொடுத்த்தார்களே அதுவரையிக்கும் ஏன் இப்போது வரைக்கும் யாருமே பெற முடியாத வரலாற்று வெற்றியை அடுத்த தேர்தலிக்கியே? மக்களின் தீர்ப்பை அவமதிக்கலாமா ?? பாலா . சும்மா நொய் நொய்ன்னு பழைய பல்லவியே பாடாதீர்கள். இப்போது தமிழகம் இரண்டாவது வலுவான பொருளாதாரம் கொண்ட மாநிலம் என்பதையும் மறவாதீர்.


sankaranarayanan
அக் 16, 2024 07:28

எல்லா ஏரிகளிலும் கோடை காலத்தில் ஒழுங்காக துார்வாரப்பட்டால் உபரிநீர் வெளியேறும் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது அதிக நீரை சேமித்து கோடைகாலத்தை நன்றாக கழிக்கலாம் சமீபத்தில் ஒழுங்காக துார்வாரப்பட்டாததால், இந்த ஏரிகள் அனைத்திலும் 60 சதவீத நீர் மட்டுமே தேக்கமுடிகிறது மழைக்காலம் முடிந்ததாம் இதைப்பற்றி பேச்சே இருக்காது இது வருடாவருமா நடந்து கொண்டிருக்கும் தொடர் கதைதான்


Duruvesan
அக் 16, 2024 06:45

ஆக ஒண்டிய அரசை கண்டித்து விடியல் கடிதம்


kantharvan
அக் 16, 2024 06:32

சும்மா உட்கார்ந்து கொண்டு கருத்து கிறுக்கும் அடிமைகள் கண் துஞ்சாமல் செயல் படும் அலுவலர்களின் பணிகளை அறிய மாட்டார்கள் எந்த சிறு உதவியும் அருகில் இருபவர்களுக்கு கூட செய்ய மாட்டார்கள் குறை சொல்ல மட்டும் வண்டி கட்டி கொண்டு வந்து விடுவார்கள் . கிறுக்குவதை நிறுத்தி அனைவருக்கும் உதவுங்கள் .


பாலா
அக் 16, 2024 07:58

இப்போது அவர்கள் செபய்யும் பணியை யாரும் குறை கூறவில்லை. இவ்வளவு காலமும் அரசாங்கம் செய்யாமல் விட்டதை பற்றி தான் பேச்சு.


Kasimani Baskaran
அக் 16, 2024 05:37

தலைக்கு மேல் தண்ணீர் போகும் பொழுது முழம் போனால் என்ன சான் போனால் என்ன?


kantharvan
அக் 23, 2024 16:46

சொட்ட தலையில் சொட்டு தண்ணீர் இடியே விழுந்தாலும் வழுக்கிட்டு போயிடும் .


முக்கிய வீடியோ