உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  அஸ்மிதா லீக் தடகளம் சென்னையில் துவக்கம்

 அஸ்மிதா லீக் தடகளம் சென்னையில் துவக்கம்

சென்னை: பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில், வீராங்கனையருக்கான, 'அஸ்மிதா லீக்' தடகள சாம்பியன்ஷிப் போட்டி, இன்று துவங்குகிறது. மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய தடகள சங்கம் மற்றும் சென்னை தடகள சங்கம் இணைந்து, 'அஸ்மிதா லீக்' தடகளப் போட்டியை, இன்று சென்னையில் நடத்துகின்றன. பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில், போட்டிகள் நடக்கின்றன. இதில், 14 - 16 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே பங்கேற்க முடியும். ஓட்டப்பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. சென்னை மாவட்டத்தில் ஒலிம்பிக் கனவுடன் செயல்படும் ஒவ்வொரு வீரர் - வீராங்கனையருக்கும், பாதை அமைத்து தரும் வகையில் போட்டிகள் நடக்கின்றன என, சென்னை மாவட்ட தடகள சங்கம் தெரிவித்து உ ள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி