உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாக்குதலில் ஈடுபட்ட அசாம் வாலிபர் கைது

தாக்குதலில் ஈடுபட்ட அசாம் வாலிபர் கைது

சென்னை, மயிலாப்பூர், சிதம்பரசாமி, இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன், 46. மாற்றுத்திறனாளி. அவர் வீட்டில் இருந்தபடியே, வேலையாட்களை வைத்து, ஆர்டரின் பேரில் சமையல் செய்து கொடுத்து வருகிறார்.அவர், மணிகண்டன், சதாம் உசேன், 20, ஆகியோரை பணியமர்த்தி இருந்தார். கடந்த 6ம் தேதி, சதாம் உசேன் அவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி, மருத்துவ செலவுக்காக, முதலாளியிடம், 25,500 ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், சொந்த ஊருக்கு சதாம் உசேன் செல்லாமல், அங்கேயே தங்கியுள்ளார்.இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு, சீனிவாசன் படுக்கை அறையிலும், அவரது அறைக்கு பக்கத்தில் மணிகண்டனும், சமையல் அறை பக்கத்தில் சதாம் உசேனும் உறங்கியுள்ளனர்.நள்ளிரவு எழுந்த சதாம் உசேன், தேங்காய் திருகும் அரிவாள்மனை கட்டையால், பணம் கேட்டால் தரமாட்டியா எனக் கேட்டு, சீனிவாசனை தாக்கியுள்ளார். தடுக்க வந்த மணிகண்டனையும் தாக்கி விட்டு தப்பிச் சென்றார்.காயமடைந்த இருவரும், மயிலாப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனிவாசன் கொடுத்த புகாரின்படி, மயிலாப்பூர் போலீசார், சதாம் உசேனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை