உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.40 லட்சத்தில் உதவிகள்

13 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.40 லட்சத்தில் உதவிகள்

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம், உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 221 மனுக்கள் வழங்கப்பட்டன. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.ஏழு மாற்றுத்திறனாளிகளுக்கு, 7.19 லட்சம் ரூபாய் மதிப்பில், இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன.ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு, 16,425 ரூபாயில், காதொலி கருவிகளும், ஒருவருக்கு, 4,700 ரூபாயில், செயற்கை காலும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை