உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சுவர் இடிந்து விழுந்ததில் நொறுங்கிய ஆட்டோ

 சுவர் இடிந்து விழுந்ததில் நொறுங்கிய ஆட்டோ

மதுரவாயல்: பள்ளி கட்டடத்தை இடித்தபோது, அதிர்வு காரணமாக சுவர் விழுந்ததில் ஆட்டோ நொறுங்கியது. வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் எம்.எம்.டி.ஏ., காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், 3.50 கோடி ரூபாய் மதிப்பில் எட்டு வகுப்பறைகளுடன் புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக, நேற்று முன்தினம், பழைய கட்டடத்தை பொக்லைன் இயந்திரத்தால் இடித்தபோது, அதிர்வு காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது சரிந்து விழுந்தது. எம்.எம்.டி.ஏ., காலனி 13வது தெருவைச் சேர்ந்த யேசுதாஸ் என்பவருக்கு சொந்தமான ஆட்டோ, அப்பளம் போல் நொறுங்கியது. இந்த ஆட்டோ கடந்த மாதம் தான் புதிதாக வாங்கியதாக, ஓட்டுநர் தெரிவித்தார். ஒப்பந்ததாரர் பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்ளாததாலே விபத்து நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை