உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காஷ்மீர் நபர்களிடம் பணம் பறிப்பு: ஆட்டோ ஓட்டுனர் கைது

காஷ்மீர் நபர்களிடம் பணம் பறிப்பு: ஆட்டோ ஓட்டுனர் கைது

ஜெ.ஜெ.நகர், ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர் கஜிந்திரா ராஜ், 25. இவர், பட்டாபிராமில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை சம்பந்தமாக, தன் நண்பர்களுடன் நேற்று முன்தினம் காலை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார்.அங்கிருந்து, பட்டாபிராம் செல்வதற்காக ஆட்டோவில் ஏறி உள்ளனர். ஜெ.ஜெ., நகர், கோல்டன் பிளாட்ஸ் அருகில் சென்றபோது, ஓட்டுனர் திடீரென ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.ஏற்கனவே அங்கு காத்திருந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுனருடன் சேர்ந்து, கஜிந்திரா ராஜ் மற்றும் அவரது நண்பர்களை மிரட்டி 2,300 ரூபாய் பறித்தனர். மேலும், 'ஜிபே' வாயிலாக வங்கி கணக்கில் இருந்த 8,500 ரூபாய் என, மொத்தம் 10,800 ரூபாயை பறித்து சென்றனர்.புகாரை அடுத்து ஜெ.ஜெ., நகர் போலீசார் விசாரித்தனர். இதில், புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் திவாகர், 24, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை