உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோ கண்ணாடிகள் உடைப்பு

ஆட்டோ கண்ணாடிகள் உடைப்பு

வியாசர்பாடி: வியாசர்பாடி, மெகசின்புரத்தை சேர்ந்த தினேஷ், 35, தன்னிடம் உள்ள இரு ஆட்டோக்களை வாடகைக்கு விட்டு, தொழில் செய்து வருகிறார். நேற்று, வியாசர்பாடி, நேரு நகர், 3வது தெருவில், ஆட்டோக்களை நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று ஆட்டோவை எடுக்க சென்ற போது, இரு ஆட்டோக்களின் முன்பக்க கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்திருந்தனர். இதுகுறித்து, வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ