மேலும் செய்திகள்
பஸ்சில் ஏற முயன்ற பயணி பின்னால் வந்த பஸ் ஏறி பலி
15-Oct-2024
அண்ணா நகர்,:ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு வினியோகிக்க, 'ரூட் எண்: 22' ஆவின் பால் லாரி, அம்பத்துாரில் இருந்து, அண்ணா நகர் வழியாக சேத்துப்பட்டை நோக்கிச் சென்றது.பால் லாரியை, கும்பகோணத்தைச் சேர்ந்த மனோகரன், 49, என்பவர் ஓட்டினார். கொரட்டூரைச் சேர்ந்த கிளீனர் தண்டபாணி, 32, உடனிருந்தார்.அப்போது, 4:00 மணியளவில், அண்ணா நகர் நியூ ஆவடி சாலையில் சென்ற போது, மனோகரன் துாக்க கலக்கத்தில் திடீரென, முன்னால் சென்ற சிமென்ட் கலவை லாரியின் மீது மோதினார். இதில், பால் லாரியின் முன்பக்கம் முழுதும் நொறுங்கியது. மனோகரனின் முகம், காலில் லேசான காயமும், தண்டபாணிக்கு லேசான காயமும் ஏற்பட்டது. கலவை லாரிக்கு சேதம் ஏற்படவில்லை.சம்பவம் அறிந்து வந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவலறிந்து வந்த ஆவின் நிர்வாகிகள், விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த பாலை, மாற்று வாகனத்தில் அனுப்பினர். திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Oct-2024