விருதுகள் வழங்கும் விழா
'கவின்கேர்' மற்றும் 'மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன்' இணைந்து நடத்தும் 14வது 'சின்னிகிருஷ்ணன் இனோவேஷன்' விருதுகள் வழங்கும் விழா, நேற்று நடந்தது. இதில், புதுமையான தொழில் முனைவோர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், இடமிருந்து: மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் நிர்வாக இயக்குநர் விஜயகுமார், விருதாளர்கள் ராகுல் பகாரே, வினித் பத்னிஸ், கவின்கேர் நிறுவன தலைவர் ரங்கநாதன், விருதாளர்கள் மனிஷ் அமீன், அபிஷேக் பர்லா, பிரியங்கா பாபு, அவரது சகோதரர் ஸ்ரீரீஜித் பாபு, மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் தலைவர் லட்சுமிநாராயணன், டி.வி.எஸ்., சப்ளை செயின் சொல்யூஷன் நிறுவன செயல் தலைவர் தினேஷ் மற்றும் விருதிற்கான விண்ணப்ப பரிசீலனை ஆலோசகர் ஆரத்தி லட்சுமிநாராயணன். இடம்: தரமணி.