உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வருமான வரித்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

வருமான வரித்துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தாம்பரம், தாம்பரத்தில், நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, வருமான வரித்துறை குறித்து, வினாடி - வினா போட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தாம்பரம் சரக வருமான வரித்துறை அலுவலகம் சார்பில் மேற்கு தாம்பரம், கல்யாண் நகரிலுள்ள அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, வருமான வரித்துறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று மாலை நடத்தப்பட்டது.இதில் சிறப்பு விருந்தினராக, தாம்பரம் சரக வருமான வரித்துறை இணை ஆணையர் அனில்குமார் பங்கேற்று, மாணவர்களிடையே வருமான வரித்துறை குறித்து பேசினார்.தொடர்ந்து போட்டி, வினாடி - வினா மூலம் கேள்விகள் கேட்கப்பட்டு, அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சரியான பதில் கூறியவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.தாம்பரம் சரக வருமான வரித்துறை துணை கமிஷனர் ஸ்ரீராம், பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி