பேட்மின்டன் போட்டி: எஸ்.ஆர்.எம்., பல்கலை ஹாட்ரிக் தங்கம்
சென்னை,தென் மண்டல பல்கலைக்கு இடையிலான பேட்மின்டன் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை மூன்றாவது முறையாக, 'ஹாட்ரிக்' தங்கம் வென்று அசத்தியது.தென் மண்டல பல்கலைகளுக்கு இடையிலான மகளிர் பேட்மின்டன் போட்டி, கர்நாடகா மாநிலத்தில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலையில் நடந்தது. போட்டியில், தென் மண்டல அளவில், சென்னை எஸ்.ஆர்.எம்., - பெங்களூரு ஜெயின் பல்கலை உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன. அரையிறுதியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் பெங்களூரு ரோவா பல்கலை மோதின. அதில், 2 - 0 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்., பல்கலை வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் பெங்களூரு ஜெயின் பல்கலை அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான போட்டியில், 2 - 1 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்த வெற்றியால், எஸ்.ஆர்.எம்., பல்கலை மூன்றாவது முறையாக, தங்கம் வென்று, 'ஹாட்ரிக்' பட்டம் வென்றது. மூன்றாம் இடத்தை, கர்னுால் ராயல் சீமா பல்கலையும், நான்காம் இடத்தை, பெங்களூரு ரோவா பல்கலையும் கைப்பற்றின.