உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செவிக்கு விருந்தளித்த பாலசந்திரன் புல்லாங்குழல்

செவிக்கு விருந்தளித்த பாலசந்திரன் புல்லாங்குழல்

சென்னை வளசரவாக்கம், சக்தி சங்கீத சபாவில், பிரபஞ்சம் பாலசந்திரன் புல்லாங்குழல் நிகழ்ச்சி நடந்தது.துவக்கத்தில், ரங்கசாமி நட்டுவனாரின் 'சலமேல' பதவர்ணத்தை, ஆதி தாளம், கார்மேகக் குழல் கண்ணனின் பிரியமான புல்லாங்குழலை வாசித்து, ரசிகர்களின் மனதில் இசை மயக்கத்தை ஊட்டினார். தொடர்ந்து, தியாகராஜரின் 'துடுகுகல' கீர்த்தனையை, கவுளை ராகம், ஆதி தாளத்தில் வாசித்தது, ரசிகர்களை கண் கொட்டாது பார்க்க செய்து, செவிக்கு விருந்து அளிப்பதாக இருந்தது.தொடர்ந்து, தியாகராஜர் இயற்றிய, 'தெலிஸிராம' கீர்த்தனையை பூர்ணசந்திரிகா ராகம், ஆதி தாளத்தில் குழல் இசைத்தார். பின், ராகம் தாளம் பல்லவி பகுதியில், ஈஸ்வரி, மஹேஸ்வரி, ஜகதீஸ்வரி என்ற வரிசையில், கீரவாணிராகம், கண்ட திருபுடைதாளத்தில் வாசித்தது அருமை. இதில், தன் ஈடில்லா இசைத் திறமையால், ரசிகர்களின் உள்ளங்களை அள்ளினார்.இறுதியாக, புரந்தரதாஸர் இயற்றிய, 'பாக்யத லக்ஷ்மி பாரம்மா' கீர்த்தனையை, மத்யமாவதி ராகம், ஆதி தாளத்தில் இசைத்தார்.வாய்ப்பாட்டு இல்லாத கச்சேரிக்கு, ரசிகர்களே தங்கள் குரலில் பாடி, அந்த பாடலை சிறப்பு செய்தனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை