பால்கனி இடிந்து ஏழு பைக் சேதம்
பெரம்பூர், சென்னையில் நேற்று மாலை பெய்த மழையால், பெரம்பூர் நெல்வயல் சாலை மற்றும் செல்வவிநாயகர் கோவில் தெருவில், மழைநீர் 3 அடி உயரத்திற்கு குளம் போல் தேங்கியது.இங்கு, 20 ஆண்டு பழைய தபால் நிலைய அலுவலக கட்டடம் பாழடைந்து கிடந்தது. தொடர் மழை காரணமாக சேதமாகியிருந்த இந்த கட்டடத்தின் பால்கனி, நேற்று இரவு இடிந்து விழுந்தது. கட்டடத்தின் கீழே நிறுத்தப்பட்டிருந்த ஏழு இருசக்கர வாகனங்கள் சேதமாகின. அதிர்ஷ்டவசமாக, விபத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை.