பால்கனி சுவர் இடிந்து விபத்து
பெரம்பூர்: பெரம்பூர், ரமணா நகர் அசோகர் தெருவில், சுரேஷ் என்பவருக்கு சொந்தமான 30 ஆண்டுகள் பழமையான வீட்டில், பால்கனி பக்கவாட்டு சுவர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு இடிந்து விழுந்தது. இதில் கீழே நிறுத்தி வைக்கப்பட்ட ‘மாருதி சுசூகி சிலேரியோ’ கார் சேதமானது.