உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில அளவில் சதுரங்கம் சிறுவர்களுக்கு சைக்கிள் பரிசு

மாநில அளவில் சதுரங்கம் சிறுவர்களுக்கு சைக்கிள் பரிசு

சென்னை, :மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு, சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. 'ஏ - மேக்ஸ்' அகாடமி சார்பில், ஒன்பதாவது மாநில அளவிலான சதுரங்க போட்டி, அண்ணா நகர் மேற்கு விரிவில் உள்ள சி.எஸ்.ஐ., எவர்ட் பள்ளியில் நடத்தப்பட்டது. எட்டு, 10, 12, 15 மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்கும், தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட, மாநிலம் முழுதும் இருந்து, 820 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். 'பிடே' விதிப்படி, சுவிஸ் அடிப்படையில் போட்டிகள் நடந்தன. நான்கு பிரிவிலும் முதலிடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு, சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றிய, 15 பேருக்கும் கோப்பை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி