மேலும் செய்திகள்
இருசக்கர வாகனம் திருடியவர் கைது
03-May-2025
கிண்டி, பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் மதனகோபால், 37. ஆக்டிங் டிரைவர்.கிண்டியில் நேற்று முன்தினம், அவரது யமஹா இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, சாலையோரம் சிறிது நேரம் துாங்கினார். எழுந்து பார்த்தபோது, பைக் மற்றும் அவரது மொபைல் போன் திருடு போனது தெரிந்தது.அதேபோல், ஈக்காட்டுதாங்கல், நேதாஜி தெருவில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருப்பவர் ஹரிபிரசாத், 22. கடந்த 19ம் தேதி, காற்றோட்ட வசதிக்காக, அறை கதவை திறந்து வைத்து துாங்கினார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, அவரது லேப்டாப் திருடு போயிருந்தது.இந்த இரு சம்பவங்கள் குறித்தும், கிண்டி போலீசார் விசாரித்தனர். அதில், இரு இடங்களிலும், பூந்தமல்லி, பாரிவாக்கம் பகுதியை சேர்ந்த பரத், 23, என்பவரே திருடியது தெரிந்தது.நேற்று அவரை கைது செய்த போலீசார், பைக் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
03-May-2025