உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையை மிரட்டும் பைக் ரேஸ்; நள்ளிரவில் பந்தயம் வைத்து ரகளை

சென்னையை மிரட்டும் பைக் ரேஸ்; நள்ளிரவில் பந்தயம் வைத்து ரகளை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில், மக்களை பதற வைக்கும் வகையிலும், விபத்துகளுக்கு வழி வகுக்கும் வகையிலும், இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடும் சம்பவங்கள் மீண்டும் தலைதுாக்க துவங்கி உள்ளன.நேற்று முன்தினம் நள்ளிரவில், கோயம்பேடு முதல் அடையாறு வரை 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பைக் ரேஸ் சென்றுள்ளனர். வாகன ஓட்டிகளுக்கு மத்தியில், அதிவேகமாகவும் தாறுமாறாக இயக்கியதால், வாகன ஓட்டிகளை பீதியடைந்தனர்.ஆன்லைன் குழுவில் பதிவு செய்து நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் ஓர் இடத்தில் குவியும் இளைஞர்கள், அதிகாலை 1:00 மணிக்கு மேல் பைக் ரேஸ் துவங்குவதாக கூறப்படுகிறது.குறிப்பாக, 10 கி.மீ., துாரத்தை மூன்று நிமிடங்களில் கடக்க வேண்டும் எனவும், பைக்கின் வேகம் 120 முதல் 130 கி.மீ., வரை தாண்டி இருக்க வேண்டும் எனவும், பல ஆபத்தான விதிகளை வைத்து ரேஸ்களில் ஈடுபடுகின்றனர்.வெற்றி பெறுவோருக்கு 20,000 ரூபாய் வரை பரிசு தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ரேஸ் துவங்குவது முதல் முடியும் வரை நேரலையில் வெளியிடப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.இது குறித்து, போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பைக் ரேஸ் நடத்திய இளைஞர்களின் வாகனங்களில் பதிவு எண் தகடு இல்லை. இருப்பினும், போக்குவரத்து புலனாய்வு போலீசார், அடாவடி இளைஞர்களை பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.கோயம்பேடு - அடையாறு வரையில், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதில், அண்ணா நகரைச் சேர்ந்த ஐந்து பேரின் விபரங்கள் கிடைத்துள்ளன. அவர்களை தேடி வருகிறோம்.ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது, 10,000 ரூபாய் அபராதம் விதிப்பதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Mecca Shivan
மே 26, 2025 18:40

இவர்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலயத்தையே துரத்திவிட்டுட்டோமே


naranam
மே 26, 2025 16:30

கையாலாகாத ஊழல் அரசை வைத்துக் கொண்டு என்ன செய்ய?


A1Suresh
மே 26, 2025 14:34

சமீபத்தில் ஒரு உறவினர் இப்படி அதிவேகமான ஓட்டிவந்த பைக்கில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே கை கால்கள் துண்டாகி இறந்துபோனார்.


சுந்தரம் விஸ்வநாதன்
மே 26, 2025 13:33

இந்த இளைச்ச உளுத்த பருப்பு அணிக்குள்ள சார் தம்பிங்க எல்லாம் இருப்பாங்க


SUBRAMANIAN P
மே 26, 2025 13:14

இதுவும் திராவிட மாடல்ல வருது. டிசைன்ல இருக்கு.. இரவு ரோந்து போற போலீஸ் மட்டை ஆயிட்டாங்களா? இந்த போக்குவரத்துக்கு போலீஸ் அப்பிராணி சப்ரானி களைத்தான் பிடிப்பாங்க.. இதுபோல அடாவடி பைக் ரசிர்களை பிடிக்க போதுமான திறமை கிடையாது. பாவம் அவங்க என்ன செய்வாங்க.. பணம் கொடுத்து வேலைக்கு வந்திருக்காங்க. அவங்கள விடுங்க..


PENTAGANINFOTEK SHARAVANAKKUMAR
மே 26, 2025 10:49

பைக்கை பறிமுதல் செய்யவும்


Barakat Ali
மே 26, 2025 10:22

பொறுப்பற்ற இளைஞர்கள் திராவிட மாடலின் பிள்ளைகள் ....


Ramesh Sundram
மே 26, 2025 10:00

அமைதி மார்க்கத்தவராக இருந்தால் ஒன்றும் செய்ய வேண்டாம் அப்புறம் பிரியாணி போய் விடும் ஜாக்கிரதை


Bahurudeen Ali Ahamed
மே 26, 2025 12:31

ரமேஷ் எவ்வளவு வன்மம் உங்களுக்கு, ஆன்லைனில்தானே பதிகிறோம் நம்மை யாருக்கு தெரிய போகிறது என்று மோசமாக விமரிசனம் செய்யவேண்டாம்


SUBRAMANIAN P
மே 26, 2025 13:10

கோவப்படாதிங்க, இந்த ஆட்சியின் அவலத்தில் ஒன்று தான் இதுவும். அதைத்தான் அவர் குறிப்பிடுகிறார்.


A P
மே 26, 2025 09:30

இவர்களெல்லாம் சிறார் என்று விடுவிக்கப் பட வாய்ப்பு இருக்கிறது. எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது. பைக்குகளில் நம்பர் பலகை இல்லை என்று இந்த செய்தியில் பார்த்தேன். அப்படி என்றால் போலீஸ் இவன்களை சுலபமாகப் பிடிக்கலாமே. மேலும் ஒரு சந்தேகம் என்னவென்றால் போன பாதையில், இரவில் போலீசார் யாரும் இல்லையா, அப்படி தெரிந்தும் மடக்கி பிடிக்கவில்லை என்றால், இவன்களெல்லாம் தி மு க காரன்களுக்குப் பிறந்த தருதலைகளா என்று தெரியவில்லை. தீய கழகங்கள் ஒழியாத வரை மென்மேலும் இத்தகைய அட்டூழியங்கள் நடக்கத்தான் செய்யும்.


தமிழ்வேள்
மே 26, 2025 09:12

இரவு 10 மணி முதல் காலை ஐந்து மணி வரை டூ வீலர் ஓட்ட கடுமையான கட்டுப்பாடுகள் தேவை... அல்லது டூ வீலர்களின் அதிக பட்ச வேகத்தை 45 கிமீயாக தயாரிப்பு நிலையில் கட்டுப்பாடு செய்ய வேண்டும்..போலீஸ் துறை வண்டிகளுக்கு மட்டும் வேகக் கட்டுப்பாட்டு தேவையில்லை.. அகலமான சக்கரங்களை கொண்ட பைக்குகளுக்கு தடை வேண்டும்..பாம்பு போல வளைந்து நெளிந்து ஓட்டுவது இந்த மாதிரியான வண்டிகளை மட்டுமே..


சமீபத்திய செய்தி