உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பா.ஜ., பிரமுகரின் தம்பி வீடு புகுந்து வெட்டி கொலை

பா.ஜ., பிரமுகரின் தம்பி வீடு புகுந்து வெட்டி கொலை

வில்லிவாக்கம்:பா.ஜ., பிரமுகரின் தம்பியை, வீட்டுக்குள்ளே கத்தியால் வெட்டி கொலை செய்து தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர். வில்லிவாக்கம், முருகேசன் நகர் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் விஜி என்ற விஜயகுமார், 32. இவர், அதே பகுதியில் சாலையோரத்தில் 'பீப் பக்கோடா' கடை நடத்தி வந்தார். இவரது அண்ணன் மருதுபாண்டியன், பா.ஜ.,வில் வில்லிவாக்கம் மேற்கு மண்டல் தொகுதி தலைவராக உள்ளார். இருவர் மீதும், வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. விஜயகுமார், நேற்று இரவு, வீட்டில் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவருடன் இருந்த மர்ம நபர்கள், அவரை கத்தியால் வெட்டி, தப்பிச்சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை, உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்தவர், அடுத்த சில மணி நேரத்தில் உயிரிழந்தார். ஐ.சி.எப்., போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை