மேலும் செய்திகள்
மீட்கப்பட்ட ரூ.200 கோடி நிலத்தில் சிறுவர் பூங்கா
6 minutes ago
கத்திமுனையில் வழிப்பறி தம்பதி உட்பட மூவர் கைது
8 minutes ago
சென்னை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, வீடுகளில் விளக்கேற்ற அகல் விளக்கு அடங்கிய தொகுப்பை, தமிழக பா.ஜ.,வினர் மக்களுக்கு வழங்கினர். கார்த்திகை தீப திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. பலரும் வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வர். பின், பட்டாசு வெடித்தும் கொண்டாடுவர். இதனால், வேளச்சேரியில், 5,000 பேருக்கு, தலா ஐந்து அகல் விளக்கு, திரி மற்றும் எண்ணெய் அடங்கிய தொகுப்பை, தமிழக பா.ஜ., துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர் தலைமையில், அக்கட்சியினர் வினியோகம் செய்தனர். அதேபோல, வீடுகளில் விளக்கு ஏற்றுவதற்காக, பல்வேறு இடங்களில் மக்களுக்கு, பா.ஜ.,வினர் அகல் விளக்குகளை வழங்கினர்.
6 minutes ago
8 minutes ago