உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குன்றத்துாரில் காயங்களுடன் ஆண் உடல் மீட்பு

குன்றத்துாரில் காயங்களுடன் ஆண் உடல் மீட்பு

குன்றத்துார், குன்றத்துாரில், குடியிருப்பு பகுதியில் ரத்த காயங்களுடன் ஆண் உடல் நேற்று மீட்கப்பட்டது. குன்றத்துார் நகராட்சி, பொன்னியம்மன் கோவில் 2வது தெருவின் சாலை பகுதியில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடந்துள்ளது. தகவலறிந்த குன்றத்துார் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் மூக்கு, காதில் ரத்தம் வழிந்த நிலையில் காணப்பட்டதால், விபத்தில் உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !