மேலும் செய்திகள்
துணை ஜனாதிபதி வீட்டிற்கு குண்டு மிரட்டல்
20-Oct-2025
சென்னை: சாஸ்திரி பவனில் உள்ள இ.டி., அலுவலகத்திற்கு 'இ - மெயில்' மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். மயிலாப்பூரில் உள்ள தமிழக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, நேற்று காலை இ - மெயில் ஒன்று வந்தது. அதில், நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் இ.டி., எனும் அமலாக்கத்துறை அலுவலகம் உள்ளது. அங்கு, வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், வழக்கம்போல மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற் கொண்டனர். பல மணிநேர சோதனைக்கு பின், வெடி குண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. கானத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Oct-2025