உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரு விமானங்கள் சேவை மீண்டும் ரத்து

இரு விமானங்கள் சேவை மீண்டும் ரத்து

சென்னை, சென்னையில் இருந்து பெங்களூரு, குவஹாத்தி புறப்படும் விமானங்கள், அதேபோல் கோல்கட்டா, பெங்களூரில் இருந்து சென்னைக்கு வரும் 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தின் நான்கு விமானங்கள், நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டது.எந்த முன் அறிவிப்புமின்றி விமானங்கள் ரத்து செய்யப்படுவதால், 'புக்கிங்' செய்த பயணியர், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இந்நிலையில் நேற்றும், சென்னை விமான நிலையத்தில் இருந்து மாலை 6:10 மணிக்கு குவஹாத்தி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், பெங்களூரில் இருந்து மாலை 5:35 மணிக்கு சென்னை வரும் விமானத்தின் சேவை ரத்து செய்யப்பட்டது.பயணியருக்கு ரத்து குறித்த எஸ்.எம்.எஸ்., முன்கூட்டியே அனுப்பப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், முன்கூட்டியே புக்கிங் செய்த பயணிருக்கு, இது போன்று விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுவது, அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

சென்னை - பாங்காக் புது விமான சேவை

உலகில், பலரும் அதிகமாக சுற்றுலா செல்லும் நாடாக தாய்லாந்து உள்ளது. இதன் தலைநகர் பாங்காக்குக்கு, சென்னையில் இருந்து முன்னணி விமான நிறுவனங்கள், தினசரி விமான சேவையை வழங்கி வருகின்றன.இந்நிலையில், பாங்காக்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் 'தாய் ஏர் லைன்' நிறுவனம், சென்னை - பாங்காக்; பாங்காக் - சென்னை இடையே, வாரத்துக்கு நான்கு முறை விமான சேவையை துவங்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த விமான சேவை, வரும் டிச., 15ம் தேதி முதல் செயல்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ