உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோ மீது வேன் மோதி சிறுவன் பலி

ஆட்டோ மீது வேன் மோதி சிறுவன் பலி

கீழ்ப்பாக்கம்: ஆட்டோ மீது வேன் மோதியதில், ஆட்டோவில் பயணித்த சிறுவன் உயிரிழந்தான். எழும்பூர், பாந்தியன் சாலையைச் சேர்ந்தவர் ஜெயராமன், 44; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று காலை தன் உறவினர் மகனான ராயப்பேட்டையைச் சேர்ந்த பிரனீஷ், 16, என்பவரை, ஆட்டோவில் ஏற்றி குன்றத்துருக்கு சென்றார். பூந்தமல்லி நெடுஞ்சாலை 'ஈகா' தியேட்டர் அருகே, ஆட்டோ சிக்னலில் நின்று உள்ளது. அப்போது, வேகமாக வந்த வேன், ஆட்டோவின் பின்னால் மோதியது. இந்த விபத்தில், பிரனீஷ் படுகாயமடைந்தான். சிறுவனை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, நேற்று மாலை சிறுவன் உயிரிழந்தான். கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வேன் ஓட்டுநர் ஷேக் யூசப், 46 என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !