மேலும் செய்திகள்
இளம்பெண் மர்ம கொலை
12-Sep-2024
சென்னை, சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், கடந்த 2022ல், சென்னையிலுள்ள தனியார் கல்லுாரி ஒன்றில் படித்துள்ளார். அப்போது, உடன் படித்த தேனாம்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார், 23, என்பவரை காதலித்துள்ளார்.திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய அருண்குமார், அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதை வீடியோவும் எடுத்துள்ளார். கடந்த பிப்ரவரியில் இளம்பெண் கர்ப்பமானதால், திருமணம் செய்து கொள்ளுமாறு அருண்குமாரிடம் வலியுறுத்தி உள்ளார். ஆனால், அருண்குமார், கட்டாயப்படுத்தி, கருவை கலைத்துள்ளார்.இந்நிலையில், கடந்த ஒன்பது மாதங்களாக திருமணம் செய்து கொள்ளாமல், அருண்குமார் ஏமாற்றி வந்துள்ளார். திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியபோது, தனிமையில் இருந்த போட்டோ, வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டியுள்ளார்.இதுகுறித்து இளம்பெண், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்து விசாரித்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட தேனாம்பேட்டை, நல்லான் தெருவைச் சேர்ந்த அருண்குமார், 23, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
12-Sep-2024