மேலும் செய்திகள்
சென்னையில் மின்விநியோகம் எப்போது?
30-Nov-2024
மடிப்பாக்கம், பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. சில இடங்களில் ஊராட்சி குடிநீர் வழித்தடங்கள் வழியாக, மேல்நிலை தொட்டிகளில் நிரப்பப்பட்ட நீர், வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், சில நாட்களுக்கு முன் மடிப்பாக்கம், செங்கேணியம்மன் கோவில் தெரு-, பெரியார் மூன்றாவது பிரதான சாலை சந்திப்பில், பூமிக்கு அடியில் செல்லும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.இதனால், தினசரி பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி, அருகில் உள்ள மழைநீர் வடிகாலில் செல்கிறது. பஜார் தெருவில் இருந்து கக்கன் தெரு, செங்கேணியம்மன் கோவில் தெரு, குளக்கரை தெரு வழியாக, மடிப்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாநகர பேருந்துகள் செல்கின்றன. தொடர்ந்து அச்சாலையில் தண்ணீர் வருவதால், சாலை உள்வாங்கும் அபாயம் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பிரதான குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரியுள்ளனர்.
30-Nov-2024