உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோ மோதி கொத்தனார் பலி

ஆட்டோ மோதி கொத்தனார் பலி

மூவரசம்பட்டு, நங்கநல்லுார், வோல்டாஸ் காலனியை சேர்ந்தவர் மணவாளன், 67. கொத்தனார். இவர், கடந்த 10ம் தேதி, கட்டுமானப் பணிக்காக மூவரசம்பட்டு பிரதான சாலை, பரங்கிமலை- - மேடவாக்கம் சந்திப்பை கடக்க முயன்றார். அப்போது, மூவரசம்பட்டு, பஜ னை கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல், 52, என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ, மணவாளன் மீது மோதியது. இதில், தலையில் காயமடைந்த அவர், நங்கநல்லுாரில் உள் ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று அதிகாலை, அவர் இறந்தார். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை