ரூ.1.50 கோடியில் கட்டடங்கள் திறப்பு
வேளச்சேரி:வேளச்சேரியில், 1.50 கோடி ரூபாயில் பணி முடிந்த திட்டங்கள், மக்கள் பயன்பாட்டிற்கு வந்தன.அடையாறு மண்டலம், 175வது வார்டு, வேளச்சேரி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், 1.15 கோடி ரூபாயில், மாநகராட்சி பள்ளி கட்டடம் கட்டப்பட்டது.அதே வார்டில், 24.86 லட்சம் ரூபாயில், ரேஷன் கடை செயல்படும் வகையில், பல்நோக்கு மைய கட்டடம் கட்டப்பட்டது. மேலும், 9.91 லட்சம் ரூபாயில், ஏ.எஸ்.கே., நகரில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. பணி முடிந்த இந்த திட்டங்கள், பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டன.