மேலும் செய்திகள்
ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி மெக்கானிக் கைது
09-Nov-2024
ராயபுரம்,பிராட்வேயில் இருந்து, மணலி நோக்கி செல்லும் தடம் எண்: '56டி' மாநகர பேருந்தை, ஓட்டுனர் கோதவரதன், 59, நேற்று ஓட்டினார்.ராயபுரம், மன்னார்சாமி கோவில் தெரு வழியாக பேருந்து வந்தபோது, அதில் பயணித்த போதை ஆசாமி, பேருந்தின் இடதுபக்க கண்ணாடியை கையால் உடைத்து சேதப்படுத்தினார்.இதுகுறித்து, ராயபுரம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்தனர்.சம்பவத்தில் ஈடுபட்ட ராயபுரம் மேம்பாலம், பிளாட்பாரத்தில் வசிக்கும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆனந்த், 34, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
09-Nov-2024