புழல் சிறையில் கஞ்சா பறிமுதல்
புழல்,:புழல் சிறையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், கைதியிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.புழல் மத்திய சிறையில், 3,000க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். திருவல்லிக்கேணி போலீசாரால், போதை பொருள் வழக்கில், சில மாதங்களுக்கு முன் கைதான, சென்னை பல்லவன் சாலையைச் சேர்ந்த 'மாமா' கார்த்திக், 30, என்பவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று, சிறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அவரிடம், 58 கிராம் கஞ்சா இருந்தது. இது குறித்து சிறை அதிகாரிகள் புழல் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, கார்த்திக்கிடம் இருந்து, கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.