உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் நகை பறித்த கார் ஓட்டுநர் கைது

பெண்ணிடம் நகை பறித்த கார் ஓட்டுநர் கைது

கிண்டி: நடந்து சென்ற பெண்ணிடம், நான்கு சவரன் நகை பறித்த கார் ஓட்டுநரை, போலீசார் கைது செய்தனர். மாம்பாக்கம், கண்டிகையை சேர்ந்தவர் சுவாதிகா, 26. கிண்டியில் உள்ள 'ஸ்பிக்' நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த 8ம் தேதி பணி முடித்து, கிண்டி பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர், 4 சவரன் நகையை பறித்து சென்றார். கிண்டி போலீசார் விசாரணையில், மடிப்பாக்கத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் நாகராஜன், 57, என தெரிந்தது. இவரை, நேற்று கைது செய்த போலீசார், நகை மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை