ஓனரின் செயின் திருடிய கார் ஓட்டுநர்
பெரவள்ளூர், பெரவள்ளூர், சக்திவேல் நகரைச் சேர்ந்தவர் சண்முகக்குமார், 62. இவர், சென்னை மருத்துவக் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.தன் காருக்கு, கடந்த ஒரு மாதத்திற்கு முன், கேரளாவைச் சேர்ந்த முகமது அபுபக்கர், 24, என்பவரை, புதிய கார் டிரைவராக நியமித்துள்ளார்.கடந்த மாதம் 22ம் தேதி, தான் அணிந்திருந்த, 3 சவரன் செயினை கழற்றி வைத்து, துாங்கச் சென்றுள்ளார்.மறுநாள் பார்த்தபோது, செயின் மாயமாகி இருந்தது. அதே போல், கார் டிரைவரையும் காணவில்லை. வீட்டில் உள்ள 'சிசிடிவி' பதிவை பார்த்தபோது, கார் டிரைவர் முகமது அபுபக்கர், செயினை எடுத்துச் சென்றது தெரியவந்தது. திரு.வி.க., நகர் போலீசார் கார் டிரைவரை தேடி வருகின்றனர்.