மேலும் செய்திகள்
அபராதம் போடாதீங்க! போலீசிடம் கெஞ்சிய ஓட்டுநர்
13-Sep-2025
வேளச்சேரி நண்பரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட ஆட்டோ ஓட்டுநரை, சரமாரியாக தாக்கிய நண்பரின் உறவினர்களான நான்கு பெண்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வேளச்சேரி, காந்தி சாலையை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 43. ஆட்டோ ஓட்டுநர். இவர், தன் நண்பரான மாடம்பாக்கத்தை சேர்ந்த பிரின்ஸ் சார்லஸ் என்பவருக்கு, 30,000 ரூபாய் கடன் வழங்கியுள்ளார். அந்த பணத்தை கொடுத்து ஓராண்டாகியும், பிரின்ஸ் சார்லஸ் திருப்பி தராததால், இரண்டு நாட்களுக்கு முன் மாடம்பாக்கம் சென்ற ராஜேஷ்குமார், பணம் குறித்து கேட்டு உள்ளார். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இருவரும் மொபைல் போனில் சண்டையிட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலை இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பெண்கள், வீட்டில் இருந்த ராஜேஷ்குமாரை சரமாரியாக தாக்கி, உதைத்து கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். பலத்த காயமடைந்த ராஜேஷ்குமார், கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்படி, நான்கு பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த வேளச்சேரி போலீசார், சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.
13-Sep-2025