உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மத்திய, மாநில அரசு நிறுவன கட்டடங்கள் ரூ.102 கோடி மாநகராட்சிக்கு வரி பாக்கி

மத்திய, மாநில அரசு நிறுவன கட்டடங்கள் ரூ.102 கோடி மாநகராட்சிக்கு வரி பாக்கி

சென்னை: சென்னையில் உள்ள மத்திய - மாநில அரசு நிறுவனங்கள் செயல்படும் கட்டடங்கள், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய, 102.84 கோடி ரூபாயை நிலுவை வைத்திருப்பதால், 24,955 கட்டடங்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில், சொத்து வரி, தொழில் வரி பிரதானமாக உள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துவரியும், 700 கோடி ரூபாய்க்கு மேல் தொழில் வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டில் இதுவரை, 1,424 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், சொத்து வரி முறையாக செலுத்தாத தனிநபர், நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களிடம் வரி வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக, 'நோட்டீஸ்' வழங்கி வருகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல், 24,497 மாநில அரசு நிறுவன கட்டடங்கள், 458 மத்திய அரசு நிறுவன கட்டடங்கள் உள்ளன. மொத்தம் 24,955 கட்டடங்களில் இருந்து 102.84 கோடி ரூபாய் வரி வர வேண்டியுள்ளது. இந்நிறுவனங்கள் சொத்து வரி செலுத்தக்கோரி, மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறிய தாவது: சொத்து வரி வசூலிப்பில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, 2025 - 26ம் நிதியாண்டுக்கான சொத்து வரி இதுவரை செலுத்தாமல் இருப்போருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. அதேபோல், மத்திய - மாநில அரசு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் பிப்., மாதங்களில் செலுத்தி விடுவதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். மாநகராட்சிக்கு வரி செலுத்தாத அரசு கட்டடங்கள் மாநில அரசு கட்டடங்கள் 24,497 மத்திய அரசு கட்டடங்கள் 458 வரி நிலுவை தொகை ரூ.102.84 கோடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ