600 கணித சூத்திரம் வாசித்து சைதன்யா மாணவர்கள் சாதனை
சென்னை, ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்தவகையில், ஹைதராபாத், ஸ்ரீ சைதன்யா பியூச்சர் பாத்வேஸ், தி நெக்ஸ்ட் ஜெனரேஷன் குளோபல் ஸ்கூல் இணைந்து, அதிக எண்ணிக்கையிலான கணித சூத்திரங்களை சொல்லும், உலக சாதனை முயற்சி நேற்று நடந்தது.இந்நிகழ்வில், நாட்டின் 20 மாநிலங்களில் உள்ள, 120 கிளைகளில் இருந்து, 3 - 10 வயதுடைய, 10,000 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த மாணவர்கள், 'ஜூம்' எனும் இணையதளம் வாயிலாக, 600 கணித சூத்திரங்களை வாசித்து, உலக சாதனை முயற்சி மேற்கொண்டனர்.அனைவரையும் வியக்க வைக்கும் இச்சாதனையை, இங்கிலாந்தில் உள்ள உலக சாதனை புத்தகத்தின் அதிகாரிகள், நேரலையில் கண்டு பதிவு செய்தனர். சாதனையை அங்கீகரித்த பின், சான்ழிதழ்கள் வழங்கப்பட உள்ளது.ஸ்ரீ சைதன்யா பள்ளியின் கல்வி இயக்குனர் சீமா போப்பனா கூறுகையில், ''மாணவர்கள், ஆசிரியர்கள் மேற்கொண்ட இந்நிகழ்வானது கடுமையான உழைப்பின் சான்றாக உள்ளது. மாணவர்களுக்கு அழுத்தம் இல்லாமல், அவர்களின் திறமையை மேம்படுத்தி, நம்பிக்கையையும் அதிகரிக்கவும் முயற்சிக்கிறது,'' என்றார்.