உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்ட்ரல் - கூடூர் தடத்தில் 9 ரயில் சேவையில் மாற்றம்

சென்ட்ரல் - கூடூர் தடத்தில் 9 ரயில் சேவையில் மாற்றம்

சென்னை, - சென்ட்ரல் - ஆந்திரா மாநிலம், கூடூர் தடத்தில், தடா - சூலுார்பேட்டை இடையே ரயில் பாதை மேம்பாட்டு பணிகள், இன்றும், வரும் 9, 12ம் தேதிகளில் நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 8:00 மணி வரை நடக்க உள்ளன. இதனால், இந்த தடத்தில் செல்லும் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. முழு ரத்து★ சென்ட்ரல் - சூலுார்பேட்டை காலை 5:15, ஆவடி - சென்ட்ரல் காலை 6:40, சூலுார்பேட்டை - நெல்லுார் காலை 7:55, நெல்லுார் - சூலுார்பேட்டை காலை 10:20, சூலுார்பேட்டை - சென்ட்ரல் நண்பகல் 12:35 மணி ரயில்கள் இன்று, 9, 12ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறதுஒரு பகுதி ரத்து ★ சென்ட்ரல் - சூலுார்பேட்டை அதிகாலை 4:15, 5:00 மணி ரயில்கள் மேற்கண்ட நாட்களில் எளாவூர் வரை மட்டுமே இயக்கப்படும்★ சூலுார்பேட்டை - சென்ட்ரல் காலை 6:45 மணி ரயில் எளாவூரில் இருந்து இயக்கப்படும் ★ சூலுார்பேட்டை - கடற்கரை காலை 7:25 மணி ரயில் எளாவூரில் இருந்து இயக்கப்படும் என, சென்னை ரயில் கோட்டம், செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை