உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருமங்கலம் மெட்ரோ வாகன நிறுத்தத்தில் மாற்றம்

திருமங்கலம் மெட்ரோ வாகன நிறுத்தத்தில் மாற்றம்

சென்னை,திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடந்து வருவதால், அங்குள்ள வாகன நிறுத்தத்தில் ஒரு பகுதி அடுத்த இரண்டு மாதங்களுக்கு மூடப்படுகிறது. இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில், தற்போதுள்ள வாகன நிறுத்தும் பகுதியில் கூடுதலாக ஒரு தளம் அமைக்கப்படவுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்வதற்காக, வாகன நிறுத்தத்தின் 50 சதவீத பகுதி, வரும் 20ம் தேதி முதல் இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது. பயணியர் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் பகுதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை