உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தீவுத்திடல் பொருட்காட்சி தேதி மாற்றம்

தீவுத்திடல் பொருட்காட்சி தேதி மாற்றம்

சென்னை, தமிழக அரசின் சார்பில், சென்னை தீவுத்திடலில், 48வது தொழில், சுற்றுலா பொருட்காட்சி நேற்று துவங்க இருந்தது.இந்நிலையில், இரவு 7:00 மணி வரை துவக்கவிழா குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததால் துணை மேயர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வெளியேறினர்.பின் அங்கு வந்த சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் அளித்த பேட்டி:இரண்டு நாட்களாக மழை பெய்ததால் தீவுத்திடலில் அரங்குகள் அமைக்கும் பணி நடக்கவில்லை. மீதமுள்ள பணிகள் முடிந்து, நாளை மாலை, அமைச்சர் உதயநிதி பொருட்காட்சியை துவக்கி வைப்பார்.என்றாலும், 13ம் தேதி பொங்கல் கலைவிழா நடக்க உள்ளதால், 14ம் தேதியில் இருந்து தான் பொருட்காட்சி நடக்கும். அதுவரை பார்வையாளர்கள் இலவசமாக பார்த்துச் செல்லலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி