உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காற்றில் ரசாயன வாயு? எண்ணுாரில் பாதிப்பு

காற்றில் ரசாயன வாயு? எண்ணுாரில் பாதிப்பு

எண்ணுார்:எண்ணுாரில் காற்றில் கலந்து வந்த ரசாயன வாயுவால் மூச்சு திணறலால் மக்கள் பாதிக்கப்பட்டனர். எண்ணுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை பரவலாக மழை பெய்ய துவங்கியது. இதையடுத்து காற்றில் ரசாயன வாயு கலந்துள்ளது. இதன் தாக்கம் இரவு வரை நீடித்தது. இதனால், கண் எரிச்சல், மூச்சுத்திணறலால் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, சுற்றுவட்டாரத்தில் இயங்கி வரும், ரசாயனம், உரம், மின்சாரம் தயாரிப்பு, உருக்காலை, கனரக வாகனங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளே காரணம் என கூறப்படுகிறது. தொழிற்சாலைகளில் இருந்து புகைபோக்கி வழியாக வெளியேற்றப்படும் கழிவு, காற்றில் கலக்கும்படி அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும். மழை நேரங்களில், ரசாயன வாயு தரையை நோக்கி அழுத்தம் கொடுப்பதால், அவை சுற்று வட்டார மக்களை பாதிக்கிறது. இதேபோல, மணலி மற்றும் திருவொற்றியூரின் ஒருசில இடங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை