சென்னை : சென்னை மாநகராட்சி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கணக்கு எடுக்கும் பணியை வனத்துறை அமைச்சர் பச்சைமால் துவக்கி வைத்தார்.சென்னையில் பலவகையான மரங்கள் உள்ளன. முதன் முதலில் 1853ம் ஆண்டு, நகரில் உள்ள மரங்களின் கணக்கு எடுக்கப்பட்டது. பின் ஆங்காங்கே, சில கல்லூரி வளாகங்கள் மற்றும் கவர்னர் மாளிகை ஆகிய இடங்களில் மரங்களின் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மரக்கணக்கு எடுக்கும் பணியின் துவ க்க விழா கிண்டி தேசியப்பூங்காவில் நடந்தது.விழாவிற்கு தலைமை வகித்த அமைச்சர் பச்சைமால், மரக்கணக்கு எடுக்கும் பணியை துவக்கி வைத்து பேசும்போது, ''இந்தியாவில் முதன் முறையாக சென்னை மாநகராட்சி பகுதியில் மரங்கள் கணக்கெடுப்பு பணி துவக்கப்பட்டுள்ளது. மரங்களின் மொத்த எண்ணிக்கை, எத்தனை அரிய வகை மரங்கள் உள் ளன. மரங்களின் அடர்த்தி குறித்தும், அவைகள் பரவி உள்ளது பற்றியும் அறிந்துக் கொள்ள முடியும்.தமிழகத்தை பசுமைமிக்க மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்று தான் சென்னையை பசுமையாக்கும் திட்டம்'' என்றார்.முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கவுதம்டே பேசும்போது, ''சுனாமி பாதிப்பை மாங்குரோவ் மரங்கள் தடுத்தது. அம்மரங்களை பாதுகாக்க வேண்டும்,'' என்றார். சென் னை மாவட்ட வனப்பாதுகாவலர் கல்யாணசுந்தரம் பேசுகையில், இந்தக் கணக்கெடுப்பு பணி கல்லூரி மாணவ, மாணவியர், தேசிய பசுமைப்படை, தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைபெறும். வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். சென்னையில் 51 வகையான மரங்கள் உள்ளது,'' என்றார். தலைமை வனப்பாதுகாவலர் சேகர், உயிரின வனப்பாதுகாவலர் யுவராஜ், சென்னை மாவ ட்ட வனப்பாதுகாவலர் கல்யாணசுந்தரம் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் நரசிம்மன்,சேகர், இயற்கை அறக்கட்டளை நிர்வாகி திரு நாரணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட வன அதிகாரி சவுந்திரராஜன் நன்றி கூறினார்.மரக்கணக்கு எடுக்கும் பணியில் சென்னை கிறிஸ்துவக் கல்லூரி, பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரி, மாநிலக் கல்லூரி, குரோம்பேட்டை வைஷ்ணவா, பச்சையப்பன் கல்லூரி மாணவ, மாணவியர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.