உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கல்லூரி மாணவியிடம் 5 சவரன் செயின் பறிப்பு

கல்லூரி மாணவியிடம் 5 சவரன் செயின் பறிப்பு

சென்னை : தனியாக நடந்து வந்த கல்லூரி மாணவியிடம், 5 சவரன் தங்க செயினை, பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருமுல்லைவாயல், மணிகண்டபுரம் 8வது தெருவைச் சேர்ந்தவர் மகேஷ். இவரின் மகள் சர்மிளா,18. தனியார் கல்லூரியில், பி.எஸ்.சி., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று கல்லூரி முடிந்து, அரசு பஸ்சில் மணிகண்டபுரம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, சாந்திபுரம் ஜங்ஷன் வழியாக, வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, டூ வீலரில் வந்த இரண்டு வாலிபர்கள், சர்மிளா கழுத்தில் அணிந்திருந்த, 5 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து, அவர் திருமுல்லைவாயல் போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து, 5 சவரன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ