உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மருந்தீசுவரர் கோவில் நந்தவனத்தில் நட்சத்திர செடிகள் வளர்க்கப்படுமா?

மருந்தீசுவரர் கோவில் நந்தவனத்தில் நட்சத்திர செடிகள் வளர்க்கப்படுமா?

திருவான்மியூர் : திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில் நந்தவனத்தில், நட்சத்திர செடிகள் வளர்க்கப்பட வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவான்மியூரில் அமைந்துள்ளது மருந்தீசுவரர் திருக்கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன், மருந்தீசுவரருக்கு நந்தவனம் ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு நந்தவனத்தை கோவில் நிர்வாகம் சீரமைத்தது. ரோஜா, மல்லிகை, சாமந்தி உள்ளிட்ட செடிகள் வைக்கப்பட்டுள்ளன. உபயதாரர் மூலமாக தற்போது, பராமரிக்கப்பட்டு வரும் இந்த நந்தவனத்தில், மலர் செடிகளுடன் நட்சத்திர செடிகளும் வளர்க்கப்பட வேண்டும், என பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.இதுகுறித்து, தனலட்சுமி என்ற பக்தர் கூறுகையில், ''ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு செடியென, மொத்தம் உள்ள, 27 நட்சத்திரத்திற்கும் அதற்கான செடிகள் உள்ளன. உதாரணமாக, பரணி நட்சத்திரத்திற்கு நெல்லிச் செடி, கார்த்திகை நட்சத்திரத்திற்கு அத்திச் செடி, ரோகிணி நட்சத்திரத்திற்கு நாவல் செடி என, அனைத்து நட்சத்திரத்திற்கும் அதற்கான செடியுள்ளது.குறிப்பிட்ட நட்சத்திரம் உடையவர்கள், அதற்கான செடியை வழிபடுவதன் மூலம், தோஷங்கள் நீங்கி, வாழ்வின் அனைத்து வளங்களையும் பெறமுடியும். நந்தவனத்தில் நட்சத்திரச் செடிகளையும் வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,''என்றார்.இதுகுறித்து, கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, ''கோவில் வளாகத்தினுள், 27 நட்சத்திரத்திற்கும் அதற்கான செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. நந்தவனத்திலும் நட்சத்திர செடிகள் வளர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பக்தர்கள் தங்களின் நட்சத்திரத்திற்கான செடிகளை நந்தவனத்தில் வளர்க்க நினைத்தால், கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று வளர்க்கலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை